உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதார நிலையத்தை சுற்றி புதர் அகற்றினால் அச்சமில்லை

சுகாதார நிலையத்தை சுற்றி புதர் அகற்றினால் அச்சமில்லை

பந்தலுார்;பந்தலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலுார் அருகே அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சாலை மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. சுகாதார நிலையம் மட்டும் இன்றி குடியிருப்புகளும் அமைந்துள்ள நிலையில், இங்கு அடிக்கடி யானைகள் பகல் நேரத்தில் வந்து செல்வது வழக்கம். சுகாதார நிலையத்தை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால், யானைகள் வருவது குறித்து தெரியாமல் சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், பாம்பு, சிறுத்தை போன்ற வனவிலங்குகளும், வந்து செல்வதால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.எனவே, சுகாதார நிலையம் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை