மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்;பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்காத நிலையில், கூடலுார் பகுதி விவசாயிகள், தேயிலை செடிகளை அகற்றி மாற்று விவசாயமாக காபி, பாக்கு நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.நீலகிரியின் பொருளாதார தேயிலை, சுற்றுலாவை சாய்ந்துள்ளது. அதில், கடந்த பல ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு, நிரந்தர விலை இன்றி விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.அதில், கூடலுார், பந்தலுார் பகுதி விவசாயிகள் ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு பயிரிட்டு ஓரளவு சமாளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பிற பகுதி விவசாயிகள் இதற்கும் வழியின்றி உள்ளனர்.தற்போது, பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை இன்றி தொடர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கூடலுார் விவசாயிகள், தேயிலை செடிகளை அகற்றி, காபி, பாக்கு செடிகளை நடவு செய்து வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'கடந்த பல ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை இல்லை. தொழிலாளர்கள் கிடைப்பதிலும் அவர்களின் சம்பள உயர்வு சமாளிக்க முடியாது நிலை உள்ளது. நஷ்டத்தை தவிர்க்க தேயிலை செடிகளை அகற்றிவிட்டு, காபி மற்றும் பாக்கு நடவு செய்து வருகிறோம். இவை பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்,' என்றனர்.
03-Oct-2025