மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
பந்தலுார்;கேரளா மாநிலம் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர்கள் உம்மர், அவரின் மனைவி ஆமினா குட்டி உட்பட ஆறு பேர் மைசூர் சுற்றுலா சென்று விட்டு, காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, தமிழக எல்லை சோதனை சாவடியான சோலாடி அருகே, கேரளா மாநிலம் வைத்திரி என்ற இடத்தில், பெங்களூரு நோக்கி சென்ற கேரளா மாநில அரசு பஸ்சில், இவர்களின் வாகனம் எதிர்பாரா விதமாக மோதியது. அதில், உம்மர், அவரது மகள் ஆஷ்னா, மகன் அப்துல்லா ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், அப்துல்லா கோழிக்கோடு மருத்துவமனையிலும், மற்ற இருவர் மேம்பாடி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்தில், உம்மரின் மனைவி ஆமினா குட்டி, மகன்கள் ஆதில், அமீர் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வைத்திரி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
27-Dec-2025