உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அருகே புலி நடமாட்டம் ;சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஊட்டி அருகே புலி நடமாட்டம் ;சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஊட்டி;ஊட்டி பைன் சோலை அருகே புலி நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணியர், அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி, பைன்சோலை அருகே நேற்று மதியம், ஒரு புலி நடமாடியதாக தகவல் கிடைத்தது. ரேஞ்சர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். ரேஞ்சர் சசிக்குமார் கூறுகையில்,''புலி நடமாட்டத்தால் பைன் சோலை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணியரை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பைன்சோலையை பார்வையிட இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ