உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

நீலகிரியில் 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

ஊட்டி:நீலகிரியில், 37 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி குரூப்--4க்கான தேர்வு நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்வானது, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய தாலுகாவில், 37 மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி உட்சைடு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தனர். அதில், 7,031 பேர் தேர்வு எழுதினர்; 2,925 பேர் 'ஆப்சென்ட்' ஆகிய இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை