உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் வீடு இழந்த மக்கள் புதிய குடியிருப்பு கட்டி தர நடவடிக்கை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

மழையால் வீடு இழந்த மக்கள் புதிய குடியிருப்பு கட்டி தர நடவடிக்கை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

பந்தலுார்;'பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் குடியிருப்பு கட்டித்தரப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார். நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென கனமழை பெய்தது. ஒரே நாளில், 278 மி.மீ., மழை பதிவான நிலையில், சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.மேலும், பொன்னானி, வட்டக்கொல்லி பகுதியில் குடியிருப்புகளை ஆற்று வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்கி உள்ளவர்களை, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று காலை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தங்கியிருந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், பாய் தலையணை மற்றும் அரசு மூலம் 1,000 ரூபாய், தி.மு.க. சார்பில், 2,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''மழை பெய்து பேரிடர்கள் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், மழையின் போது ஆற்று வெள்ளம் சூழ்ந்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தரப்படும்,'' என்றார். அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி