மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜாக்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, 4,200 வகைகளை சேர்ந்த, 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் ரோஜா செடிகளுக்கு 'புரூனிங்' செய்யப்பட்டது. பின், உரம் கலந்த தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் ரோஜா செடிகளை பாதுகாக்க தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சப்பட்டது. தற்போது, பூங்காவில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துள்ளது. மேலும், கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன், 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பூக்க துவங்கியுள்ள ரோஜா மலர்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு 'செல்பி, போட்டோ' எடுத்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
03-Oct-2025