ஊட்டி ஏரியில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி;ஊட்டியில் சுட்டெரிக்கும் வெயிலில் 'குளுகுளு' படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகள் சவாரி செய்து, குதுாகலம் அடைந்து வருகின்றனர்.சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்களில், குறைந்தபட்சம், 10 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர்.ஊட்டியில் வெயிலின் தாக்கம் குறைவு என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா அழகை காணும் சுற்றுலா பயணிகள், படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்ய தவறுவதில்லை.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை விடுமுறையான நேற்று காலை முதல், ஊட்டி ஏரிக்கு வந்த திரளான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.