உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படகு சவாரிக்கு திரண்ட சுற்றுலா பயணியர் இதமான காலநிலையில் குதுாகலம்

படகு சவாரிக்கு திரண்ட சுற்றுலா பயணியர் இதமான காலநிலையில் குதுாகலம்

ஊட்டி, : ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய கேரளா சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, 130 படகுகள் இயக்கப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். கோடை சீசன் முடிந்தாலும் கணிசமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை விடுமுறையை ஒட்டி கேரளா சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் ஊட்டிக்கு வந்தனர். நேற்று, படகு இல்லத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகரித்ததால் படகு இல்லம் நிர்வாகம் வரிசையில் நிற்க வைத்து படகு சவாரி செய்ய அனுமதித்தனர். தொடர்ந்து, இதமான காலநிலையை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை