உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மழை காரணமாக, இரண்டு இடங்களில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையில், ஆங்காங்கே மரங்கள் விழுந்து, லேசான மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்து, மாலை வரை நீடித்தது. மாலை, 4:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கீழ் கோத்தகிரியில், 43 மி. மீ., கோடநாட்டில், 32 மி.மீ., மழை பதிவானது.அதில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு பகுதி மற்றும் கீழ் கோத்தகிரி சோலுார்மட்டம் இடையே, இரண்டு இடங்களில் சாலையோரத்தில் போதிய வேர் பிடிப்பு இல்லாமல் இருந்த மரங்கள் விழுந்தன.தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அகற்றி சீரமைத்தினர். இதனால், இவ்விரு சாலைகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ