மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்;'கூடலுார் இரும்புபாலம் பகுதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கிடக்கும் மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார், இரும்புபாலம் அருகே கோழிக்கோடு சாலையோரம் இருந்த மரம், கடந்த மாதம், 4ம் தேதி, அதிகாலை சாலையில் சாய்ந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது; மின் கம்பம் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.தீயணைப்புத் துறையினர், சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மின் துறையினர் மின்கம்பத்தை மாற்றி மின் சப்ளை வழங்கினர். தொடர்ந்து, மரத்துண்டுகள் மற்றும் அடிப்பாகத்தை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் மரத்தின் அடிபாகம், மர துண்டுகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.டிரைவர்கள் கூறுகையில், 'விபத்து ஏற்படும், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தின் அடிப்பாகம் மற்றும் சாலையோரம் கிடக்கும் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் இந்த மரங்கள் இருப்பது தெரியாது என்பதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.
03-Oct-2025