மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்;கூடலுாரில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் வயல் நண்டுகளை, பழங்குடியின பெண்கள் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.கூடலுார் பகுதியில், பணியர், குரும்பர், காட்டு நாயக்கர் இன பூர்வ பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் சீசன் காலங்களில் வனங்களில் கிடைக்க கூடிய கீரை, கிழங்கு, மீன்கள் தேடி பிடித்து தங்கள், பாரம்பரிய முறையில் சமைத்து உண்டு வருகின்றனர். 'இதன் மூலம் சீசன் காலங்களில் ஏற்படும் நோய்கள் வருவதை தடுக்க முடியும்,' என, கூறுகின்றனர்.தற்போது, கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், வயல்களில் நண்டுகள் அதிகரித்துள்ளது. பணியர் இன பழங்குடியின பெண்கள், நீரோடை ஓரங்களில் கிடைக்கும் கோரை புற்களை நண்டு துளைக்குள் விட்டு அதனைப் பிடித்து சேகரித்து, சமைத்து உண்டு வருகின்றனர்.பழங்குடியினர் கூறுகையில், 'பருவமழைக் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் குளிர் காரணமாக உடல், கை, கால் வலிகள் ஏற்படுகிறது. இதனை போக்க நண்டுகளை பிடித்து ரசம் வைத்து உண்டு வருகிறோம். தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில், வயல் நண்டுகளை பிடித்து சமைத்து உண்டு வருகிறோம். இதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் உடல் பாதிப்புகளை தடுக்க முடியும்,' என்றனர்.
03-Oct-2025