உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின வாலிபர் காயம்

காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின வாலிபர் காயம்

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ள அட்டப்பாடி வன எல்லையில், அகளி கூடன்சாளை பழங்குடியின குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 34. கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், இருளான பகுதியில் நின்றிருந்த காட்டு யானை, துதிக்கையால் ஈஸ்வரனை தூக்கி வீசியது. காட்டு யானையிடம் இருந்து தப்பித்து, அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் ஓடி ஈஸ்வரன் தப்பினார். படுகாயமடைந்த ஈஸ்வரன், கோட்டத்துறை தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, வன துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை