உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காசநோய் பரிசோதனை :விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் பரிசோதனை :விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலுார்:பந்தலுார் அருகே காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. பந்தலுார் அருகே உப்பட்டி மற்றும் சேலக்குன்னா பகுதிகளில், பந்தலுார்அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு, 'கே.பி.டி.எல்., பவுண்டேஷன்' இணைந்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள், பழங்குடியினர்களுக்கு இலவசமாக காசநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, 'காச நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள்,' குறித்து விளக்கினார். காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜய குமார், 'காசநோய் பரவும் விதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், அரசு சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ முறைகள்,' குறித்து தெரிவித்தார். தொடர்ந்து, அனைவருக்கும் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ