| ADDED : ஜூன் 20, 2024 05:19 AM
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சந்தீப் தலைமையிலான போலீசார், நேற்று பாலக்காடு நகரில் உள்ள தனியார் லாட்ஜில் சோதனை நடத்தினர்.அப்போது, லாட்ஜில் தங்கியிருந்த பெண் உட்பட இருவரின் பேக்கை சோதனை செய்த போது, 7 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், பாலக்காட்டில் வாலிபர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதும், கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த ஆன்சி, 29, மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த அன்ஷாப், 37, ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டனர்.