| ADDED : ஜூன் 12, 2024 10:28 PM
மேட்டுப்பாளையம் : காரமடையில் மூன்று நாட்களில் 600 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.மேட்டுப்பாளையம், காரமடையில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 10ம் தேதி துவங்கியது. இதையடுத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காரமடை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதிகளான, சிக்காரம்பாளையம், வடவள்ளி, பெரிய படினூர், கள்ளிப்பாளையம், சென்னிவீரம் பாளையம், உள்ளிட்ட கிராமங்களில் இதுவரை 600 மாடுகளுக்கு கடந்த 3 நாட்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று ஓடந்துறை பகுதியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.