உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலத்தின் ஓரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் சிக்கல்

பாலத்தின் ஓரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் சிக்கல்

கூடலுார்;கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், மரப்பாலம் அருகே, பாலத்தின் ஓரம், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால், பாதிப்பு ஏற்படுகிறது.கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், மரப்பாலம் அருகே ஆற்றின் குறுக்கே, அமைக்கப்பட்ட குறுகியபாலம் வாகன போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது இதனால், பாலத்தை அகலப்படுத்த டிரைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகலப்படுத்தினர். இந்நிலையில் சிலர் இந்த பாலத்தின் ஓரத்தை, வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அடிக்கடி வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்துகள் அபாயமும் உள்ளது.டிரைவர்கள் கூறுகையில்,'போக்குவரத்துக்கு இடையூறாக, பாலத்தின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ