உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

குன்னுார்:குன்னுார் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.குன்னுார் பாய்ஸ்கம்பெனி அருகே உள்ள வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, தினமும் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது. நேற்று நடந்த அன்னையின் பிறந்த நாள் விழா சிறப்பு திருப்பலி ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது.மாலை, 5:00 மணிக்கு குன்னுார் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, மவுன்ட் பிளசன்ட் புனித சகாய மாதா ஆலய பங்குதந்தை ஆல்பர்ட் செல்வராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. தொடர்ந்து, ஆடம்பர தேர்பவனி நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் பங்கு மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை