மேலும் செய்திகள்
அரசு மருத்துவ கல்லுாரியில் காலாண்டு கூட்டம்
8 minutes ago
பந்தலுார்;'பந்தலுார் வனப்பகுதியில் அதிகாலையில் வாக்காளர்கள் ஓட்டு போட நடந்து வர வேண்டாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.வனச்சரகர் அய்யனார் கூறுகையில்,''பந்தலுார் சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைந்துள்ளதால், வனத்துறையினர், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்கள் அதிகாலை நேரங்களில் வருவதை தவிர்ப்பதுடன், பகல் நேரங்களில் வனப்பகுதி வழியாக நடந்து வருவதையும் தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
8 minutes ago