மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:மஞ்சூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய வார்டு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். கேரள, கர்நாடக மாநில எல்லையோரம், நீலகிரி மாவட்டம் இருப்பதால், பல இடங்களில் இருந்து இங்கு, புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் உள்ளது. இதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அவ்வப்போது சோதனை நடத்தி புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், தனிப்பிரிவு எஸ்.ஐ., அப்பாஸ் தலைமையிலான போலீசார் தொட்டகம்பை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். தொடர்ந்து, காரை சோதனை செய்ததில் அதில், 4 பண்டல்களில், 90 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த தமிழ்வாணன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். தமிழ்வாணன் குந்தா ஊராட்சியில் வார்டு உறுப்பினர் உள்ளார். விசாரணையில் அவர், 'கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து விற்பனை செய்வதற்காக புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தார்,' என்பது தெரியவந்தது.
03-Oct-2025