உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தில் நீர் வீழ்ச்சி: சுற்றுலா பயணிகள் வியப்பு

வனத்தில் நீர் வீழ்ச்சி: சுற்றுலா பயணிகள் வியப்பு

கூடலுார்;கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஓவேலி பசுமை வனங்களுக்கு இடையே உள்ள நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களில் சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. மழையுடன் வீசிய காற்றில், 5000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்களின் பாதிக்கப்பட்டன.தொடர் மலையில் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. விவசாயிகள், வயல்களில் நெல் விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இங்குள்ள ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஓவேலி வனப்பகுதிகளில் உள்ள, நீர் வீழ்ச்சிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோழிக்கோடு சாலை வழியாக பயணிக்கும் கேரளா மற்றும் மாநில சுற்றுலா பயணிகள், பசுமை வனப்பகுதிகள் நடுவே, வெண்மையாக விழும் நீர்வீழ்ச்சிகளை வியப்புடன் ரசித்து செல்கின்றனர். நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள காட்சி கோபுரத்திலிருந்து இதன் அழகை ரசித்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'வனப்பகுதியில் தென்படும் நீர்வீழ்ச்சிகள் வியப்படை செய்துள்ளது. அதன் அருகே சென்று வர வேண்டும் என்ற ஆசையும் ஏற்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி