உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இனிப்பு கொடுத்து வரவேற்பு

இனிப்பு கொடுத்து வரவேற்பு

கூடலுார்;கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி, குங்கூர்மூலா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நேற்று, திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராஜம்மா மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜமால் முகமது குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பி.டி.ஏ., தலைவர் ரதிஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மினிமோள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை