உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது

கணவனை தீ வைத்து கொன்ற மனைவி கைது

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார்ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி,37. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விமலாராணி,28, அடிக்கடி மொபைல் போனில் பேசி கொண்டிருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விமலாராணி, கணவன் முரளியின் கண்களில் பெவிகோல்; உடலில் 'தின்னர்' திரவத்தை ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு விமலாராணியை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு, 8 வயது, 5 வயது, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ