| ADDED : ஜூன் 23, 2024 11:56 PM
கூடலுார்;நடுவட்டம், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு இரவில் நுழையும் காட்டு பன்றிகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.நடுவட்டம் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனை கடந்த ஜன., மாதம் மாநில முதல்வர் திறந்து வைத்தார்.ஊட்டியில் இருந்து, கூடலுார் கேரளா, கர்நாடகா இடையை இயக்கப்படும் பஸ்கள், இங்கு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு செல்கிறது. இரவு நேரங்களில் அருகே உள்ள காடுகளில் இருந்து, உணவு தேடி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வரும் காட்டு பன்றிகள் பயணிகளை தாக்கும் அபாயம் உள்ளது.மேலும், பன்றிகள் சாலையை கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு, காட்டு பன்றிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.