மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
2 minutes ago
பெ.நா.பாளையம்;மருதமலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த, 10க்கும் மேற்பட்ட யானைகள் சின்னதடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி சுற்றி வருகிறது. நேற்று முன்தினம் வீரபாண்டி புதூரில் உள்ள தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை, வாழை, பாக்கு மரங்களை வேரோடு பிடுங்கி வீசி சேதப்படுத்தியது. சின்னதடாகம் வட்டாரத்தில் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 minutes ago