| ADDED : ஜூன் 07, 2024 12:12 AM
பந்தலுார்;'சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்,' என, அறிவுறுத்தப்பட்டது.பந்தலுாரில் 'ஏகல் கிராமோத்தன்' அறக்கட்டளை சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் தொழிற்பயிற்சி ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்று பேசுனார்.சமூக ஆர்வலர் செல்வகுமார் பேசுகையில், ''பெண்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முன் வந்தால், சூழல் பாதிப்பால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, நாட்டை காப்பாற்ற இயலும்,'' என்றார். தொடர்ந்து, சமிதி நிர்வாகிகள் பசுபதி ராஜா, தினேஷ்குமார், கண்ணன் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். பயிற்சி மாணவிகள் மற்றும் பெண்கள், பாடல், ஓவியம், கவிதை, பேச்சு, கட்டுரை ஆகியவற்றின் மூலம் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பரிசுகளை வென்றனர். நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.