உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி

கடசோலை பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி

கோத்தகிரி:கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரிக்கையூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் பேசுகையில் ''பள்ளி மாணவர்கள் காடுகள், மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க முன்வரவேண்டும். பொது இடங்களில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை இயன்றவரை ஒழிப்பதுடன், தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்த்து, உலோக பாட்டில்களுக்கு மாற வேண்டும்,'' என்றார். முன்னதாக, ஆசிரியர் ராஜேந்திரன் அனைருக்கும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் நுால்களை வழங்கினார். மாணவர் தலைவர் சுதாகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி