உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 428 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி நலத்திட்ட உதவி: சுற்றுலா துறை அமைச்சர் வழங்கினார்

428 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி நலத்திட்ட உதவி: சுற்றுலா துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில், 428 பயனாளிகளுக்கு, 12.15 கோடி ரூபாய் நலத்திட்டங்களை சுற்றுலா துறை அமைச்சர் வழங்கினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, பயனாளிகளுக்கு, 12.15 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:மாநில அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒவ்வொரு துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.நீலகிரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பழங்குடியினருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு துறைகளின் கீழ், 428 பயனாளிகளுக்கு, 12.15 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இம்மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில், 10,700 மாணவ, மாணவிகளும், புதுமை பெண் திட்டத்தின் கீழ், 1,202 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், 982 மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர்.நான் முதல்வன் திட்டத்தில், 9,157 நபர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, 582 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுசிக் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ