உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொகுப்பூதியத்தில் 1500 செவிலியர் பணிகளை நிரப்பினால் பயன்; ஊட்டியில் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை

தொகுப்பூதியத்தில் 1500 செவிலியர் பணிகளை நிரப்பினால் பயன்; ஊட்டியில் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் பிரீத்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுசிலா கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 'தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிதாக தொடங்கப்பட்ட, 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1500 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதிய செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்;கொரோனா காலகட்டத்தில், இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்; நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி., மற்றும் ஐ.பி.எச்.எஸ்., பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்; எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும்; இரவு பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணியிடத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.பொருளாளர் நல்கிஸ் பேகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், வட்ட கிளை பொருளாளர் சுரேஷ், அன்னக்கிளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி