உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 182 மனுக்கள்

ஊட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 182 மனுக்கள்

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், 182 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கைக்காக துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.வாரந்தோறும், திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைத்தீர் கூட்டத்தில், அரசு உதவிபெறும் பயனாளிகளிடம் இருந்து, மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கைக்காக, துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.அதன்படி, கலெக்டர் அருணா தலைமையில், நேற்று நடந்த கூட்டத்தில், 182 மனுக்கள் பெறப்பட்டன. இதில், கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து, மருத்துவத்திற்காக ஆஷாராணி என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.மேலும், சிறப்பாக தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய, 2 தேர்தல் கல்வி குழு உறுப்பினர்கள், 2 கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியில் முதலிடம் பிடித்த துானேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாய் கிருஷ்ணா ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை