போக்சோ வழக்கில் 20 ஆண்டு
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதியின், 16 வயது சிறுமிக்கு, 30 வயதான உறவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வேறொரு சிகிச்சைக்காக தம்பதியினர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பெற்றோர் புகாரில், கூடலுார் போலீசார், விசாரித்து போக்சோவில், 2020 ஆக., 26ல் சிறுமியின் உறவினரை கைது செய்தனர். ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.