மேலும் செய்திகள்
போதை மாத்திரையுடன் பாலக்காட்டில் இருவர் கைது
22-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை பதுக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், போதை தடுப்பு பிரிவினர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து, பாலக்காடு நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். அதில், 2.64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 66.08 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, காரில் இருந்த பாலக்காடு மாவட்டம் குனிச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன், 34, சடனாம்குறுச்சி பகுதியைச் சேர்ந்த முகமது அன்வர், 37, மன்சூர் அலி, 25, வெண்ணைக்கரை பகுதியைச் சேர்ந்த பிரோஸ், 39, ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
22-Jul-2025