மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
15-Nov-2024
பாலக்காடு; பாலக்காடு அருகே, கிணற்றில் தவறி விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் சுனங்காடு பகுதியைச் சேர்ந்த ஜிஷ்ணு- - இந்துஜா தம்பதியரின் மகன் அத்வில், 4. நேற்று காலை, 11:15 மணிக்கு, வீட்டின் முன்னால் அத்வில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள தடுப்புச் சுவரில்லா கிணற்றில் கால் தவறி விழுந்தார். இதை கண்ட உறவினர்கள் ஓடி சென்று, ஊர் மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.ஆனால், சிறுவன் நீரில் மூழ்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒற்றைப்பாலம் தாலுகா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் சிறுவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.ஒன்றைப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
15-Nov-2024