மேலும் செய்திகள்
கடும் குளிரால் மக்கள் தவிப்பு
2 minutes ago
குன்னுார்: தென் மாநில அளவிலான தேயிலை ஏலங்களில், 40.72 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த நடப்பாண்டின், 45வது ஏலத்தில், 15.96 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது; 15.02 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 107.93 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 16.21 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 16.91 லட்சம் கிலோ வரத்து இருந்ததில், 16.18 லட்சம் கிலோ விற்ற நிலையில், ஒரே வாரத்தில், 94 ஆயிரத்து 808 கிலோ வரத்தும், 1.15 லட்சம் கிலோ விற்பனையும் குறைந்தது. எனினும், சராசரி விலை கிலோவிற்கு, 5.55 ரூபாய் உயர்ந்தால், 6 லட்சம் ரூபாய் வருவாய் அதிகரித்தது. 'டீசர்வ்' ஏலம் குன்னுார் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்பட்டதில், 99 ஆயிரத்து 314 கிலோ வந்ததில், 100 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 93.69 ரூபாயாக இருந்தது; 93.04 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 1.16 லட்சம் கிலோ முழுமையாக விற்ற நிலையில் வரத்து, விற்பனை சரிந்தது; சராசரி விலை கிலோவிற்கு, 3.19 ரூபாய் ஏற்றம் கண்டது. கோவை ஏல மையத்தில், 5.52 லட்சம் கிலோ வந்ததில், 5.23 லட்சம் கிலோ என 94.68 சதவீதம் விற்றது. சராசரி விலை, 134.33 ரூபாய் என இருந்தது. 7.03 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 5.06 லட்சம் கிலோ வந்ததில், 4.53 லட்சம் கிலோ விற்ற நிலையில், இந்த ஏலத்தில், 46 ஆயிரம் கிலோ வரத்தும், 70 ஆயிரம் கிலோ விற்பனையும் உயர்ந்த போதும், சராசரி விலையில் 5.83 ரூபாய் வீழ்ச்சி கண்டது. கொச்சி ஏல மையத்தில், 10.62 லட்சம் கிலோ வந்ததில், 9.80 லட்சம் கிலோ, 92.21 சதவீதம் விற்றது. சராசரி விலை, 168.91 ரூபாய் என இருந்தது. 16.55 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 10.36 லட்சம் வந்ததில், 9.64 லட்சம் கிலோ விற்றது; 26 ஆயிரம் கிலோ வரத்தும், 16 ஆயிரம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. கிலோவிற்கு 24 பைசா குறைந்தது. கடந்த ஏலத்தில் 16.31 கோடி ரூபாய் வருவாய் இருந்த நிலையில், இந்த ஏலத்தில், 24 லட்சம் ரூபாய் உயர்ந்தது. தென் மாநில அளவில், நான்கு தேயிலை ஏலங்களிலும், மொத்தம் 40.72 கோடி ரூபாய் கிடைத்தது.
2 minutes ago