சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
கூடலூர்: கூடலூர், ஓவேலி அருகே, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில், சண்டை சேவல்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில், நியூஹோப் எஸ்.ஐ., குமரன், கணேசன் போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில், கார்த்திக் என்பவரின் மாமியார் வீட்டில் அருகே, 4 சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இது தொடர்பாக, பெரியசூண்டி மற்றும் கர்நாடகா நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த வாசிம், 38, இர்பான், 34, சேது, 38,ஜீவா,23,அகமது, 27, தசரத்துல்லா, 26,கார்த்திக், 30, யோகேந்திரன், 22, ஆகியோரை கைது செய்து, சூதாட பயன்படுத்திய நான்கு சேவல்களையும், 5900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.