மேலும் செய்திகள்
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
மழையால் படகு சவாரி நிறுத்தம்
2 hour(s) ago
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த, 9 வயது சிறுமியை நேற்று முன்தினம் இரவு, கோவில் திருவிழாவில் திடீரென காணவில்லை; பல இடங்களில் தேடியும் பயனில்லை. இந்நிலையில், அங்குள்ள தோட்டத்தில் சிறுமியின் அலறல் கேட்டதை அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்தனர்.அப்பகுதியை சேர்ந்த அஜித்குமார், 24, என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவரை பிடித்து தாக்கி, புதுமந்து போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த அஜித்குமாரை போலீசார், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, சிறுமியின் உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு, 800க்கும் மேற்பட்டவர்கள், ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். இதனால், தமிழகம், கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவ பகுதிக்கு வந்த, ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜா, ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், தாசில்தார் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பாமா ஆகியோர் மக்களிடம் பேச்சில் ஈடுபட்டனர்.அப்போது, 'சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை, குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்ய பரிந்துரை செய்யப்படும்' என, எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.கடந்த, 2022ல் ஊட்டியில், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித்குமார் மீது 'போக்சோ' வழக்கு பாய்ந்தது. கைது செய்யப்பட்ட அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.தற்போது அவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago