உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மொட்டை மாடியில் பதுங்கிய கரடி; கரிமொரா ஹட்டியில் கலக்கம்

மொட்டை மாடியில் பதுங்கிய கரடி; கரிமொரா ஹட்டியில் கலக்கம்

குன்னுார் : குன்னுார் கரிமொரா ஹட்டியில் கரடியை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்த நிலையில், கரடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுாரில் உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகை தருகின்றன. அதில், கரிமொரா ஹட்டி கிராமத்தில் அடிக்கடி விசிட் செய்யும் கரடி இரு நாட்களுக்கு முன்பு ராஜு என்பவரின் வீட்டு மொட்டைமாடியில் ஏறியது. அங்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை. எதிரே வீடுகளில் இருந்தவர்களை கண்டு கீழே இறங்காமல் மாடியிலேயே நின்றது. ஏற்கனவே இங்கு வனத்துறை சார்பில் கண்துடைப்புக்காக கூண்டு வைக்கப்படும் பயனில்லாமல் உள்ளது. கூண்டில் உணவு பொருளும் இல்லை. கரடி உள்ளே சென்றால் கதவு தானாக மூட முடியாத நிலை உள்ளது. இதனால், வனத்துறை மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை