தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
குன்னுார்,:நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி அருகே அரக்காடு கிராமத்தில் சதாசிவம் என்பவர் காளான் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவரின் தோட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தோஷன்ராஜ் என்பவர் மனைவியுடன் மூன்று மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று அவர்களது இரு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, பணி செய்யும் இடத்தில் அமர வைத்துள்ளனர். மதியம் குழந்தைகள் விளையாடிய போது, ஒன்றரை வயதுடைய மான்வி என்ற குழந்தை அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.இதையறிந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.