உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஓய்வெடுத்த நாய்

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஓய்வெடுத்த நாய்

கோத்தகிரி : கோத்தகிரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு படுக்கையில், நாய் ஓய்வெவெடுத்த 'போட் டோ' சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கோத்தகிரி அரசு மருத்துவமனையில், அவசர பிரிவு, மகப்பேறு, சித்தா, குழந்தைகள் நல பிரிவு எக்ஸ்ரே உட்பட, பல்வேறு பிரிவுகளில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற நோயாளிகளுடன், உள் நோயாளிகள்என, ஒரு நாளுக்கு, 200 முதல், 300 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவர், அவசர சிசிச்சை பிரிவு படுக்கையில் நாய் படுத்து உறங்கியதை, தனது மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு, நோயாளிகள் உட்பட, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
அக் 31, 2024 23:05

நாய்க்கு என்ன உடனடி நோயோ? இது கால்நடை ஆஸ்பத்திரி என நினைத்து வந்து விட்டதோ? உடனடியாக ஏன் ஆம்புலன்சில் மாட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பவில்லை என நடவடிக்கை எடுக்கவும்.


Ganesun Iyer
அக் 31, 2024 22:26

அது சரி, டிஸ்சார்ஜ் ஆகி போனபோது எல்லா ஊழியர்களுக்கு இனாம் குடுத்துட்டு போச்சா?


முக்கிய வீடியோ