மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
4 hour(s) ago
குன்னுார்:குன்னுாரில் ஏற்பட்ட வனத்தீ காரணமாக ஒரு ஏக்கர் பரப்பிலான வனம் பாதிக்கப்பட்டது.குன்னுார் வனப்பகுதிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்துள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் வெலிங்டன் 'கூர்காகேம்ப்' ராணுவ பகுதியில் வனத்தீ ஏற்பட்டது. ராணுவ தீயணைப்பு துறையினருடன் குன்னுார் தீயணைப்பு துறையினரும், இணைந்து தண்ணீர் பாய்ச்சி, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதில், ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த பச்சை மரங்கள், அரிய வகை செடிகள், புற்கள் என அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வாகனங்கள் மட்டுமின்றி ராணுவத்தின் குடிநீர் டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வந்து வனத்தீ அணைக்கப்பட்டது.
4 hour(s) ago