உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பயணிகள் பாதிக்காத வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட்

பயணிகள் பாதிக்காத வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட்

மேட்டுப்பாளையம்;கடை வியாபாரிகள், பயணிகள் பாதிக்காத வகையில், 8.63 கோடி ரூபாய் செலவில், மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்டப்படும் என, அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டி, 39 ஆண்டுகள் ஆகின்றன. கடைகள் மற்றும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் கட்டடத்தில், சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் கட்டடம், கடைகளை இடித்துவிட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப்பட்டது.கட்டடத்தின் தாங்கும் திறன் குறித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்து, அரசுக்கு சான்று வழங்கினர். இதை அடுத்து தமிழக அரசு, 8.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை வைத்து முதல் கட்டமாக கோவை, திருப்பூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கடைகள், பயணிகள் நிற்கும் இடங்கள், கழிப்பிடம், பஸ்கள் நிற்கும் தளம் ஆகியவற்றை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக கடை வியாபாரிகளுக்கு, கடைகளை காலி செய்யும்படி, நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், நகராட்சி இன்ஜினியர் சுகந்தி, நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஸ்டீபன் எபினேசர் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.இடிக்கப்படும் கடைகளின் வியாபாரிகளுக்கு, பஸ் ஸ்டாண்டில் காலியாக உள்ள கடைகளில், கடைகள் வைக்க அனுமதிக்கப்படும்.கடை வியாபாரிகளும், பயணிகளும், பஸ் டிரைவர்களும் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்படும்.இவ்வாறு கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை