உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை

பராமரிப்பு இல்லாத குளத்தால் பயனில்லை

கூடலுார் ;கூடலுார் புத்துார்வயல் அருகே, பராமரிப்பின்றி கிடக்கும், கோவில் குளத்தை சீரமைத்தால், மழைநீர் சேமிக்க முடியும்.கூடலுார் புத்துார் அருகே உள்ள மகாவிஷ்ணு கோவிலுக்கு சொந்தமான குளம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. பராமரிப்பின்றி இருந்த குளத்தை சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீமதுரை ஊராட்சி சார்பில்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்தனர். அதில், மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் உயர்ந்தது. நீரை சிலர் விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளம் முழுவதும் செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. இதனால், மழை காலங்களில் மழைநீர் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் மூலம், குளத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'குளம் கோவிலுக்கு சொந்தமானது என்றாலும், அதில் தேங்கும் நீரை, சிலர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாத குளத்தை, பருவமழைக்கு முன் சீரமைப்பதன் மூலம், மழை நீரை சேகரிக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீரும் உயரும். எனவே, ஊராட்சி நிர்வாகம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளத்தை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை