சாலையில் காணப்படும் குழி; வாகன ஓட்டிகள் அச்சம்
ஊட்டி : ஊட்டி பாம்பே கேசில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் விட்டதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி பாம்பே கேசில் சாலை பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள், தனியார் கல்லுாரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இச்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அங்குள்ள கோவில் அருகே சாலை நடுவே திடீரென குழி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த நகராட்சி நிர்வாகமும் சீரமைக்காமல் விட்டதால், அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.நாள்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.