மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்: கூடலுாரில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கருத்தரங்கில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில், தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இரண்டு நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி கருத்தரங்கம் நேற்று துவங்கியது. கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்றார்.தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ்பேகம் தலைமை வகித்து, 'மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்கள் நோக்கம் செயல்பாடு,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கே.வி.கே., இணை பேராசிரியர் சிந்தியா பெர்னான்டஸ், 'அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள்; மண் மற்றும் நீர்வள மேலாண்மை' குறித்தும் பேசினார். மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு விஞ்ஞானி சுதிர்ஹனீப், வயநாடு இயற்கை விவசாயி பாபு, நீலகிரி ஆர்கானிக் தோட்டக்கலை விவசாயிகள் சங்க தலைவர் பெள்ளியப்பன் மற்றும் பலர் இயற்கை விவசாயத்தின் பயன் குறித்து விளக்கினர். கருத்தரங்கில் உதவி வேளாண்மை அலுவலர்கள் வினோத், சக்திவேல், வினோத்குமார், பிரபாகரன் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் செய்ய உற்பத்தி செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
03-Oct-2025