மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
கூடலுார்;கூடலுார் புத்துார் வயல் அருகே, ஏற்பட்ட வனத்தீயை, தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.கூடலுார் பகுதியில், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் அதிகரித்து தாவரங்கள், புற்கள் கருகி வருகின்றன. பல பகுதிகளில் வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், புத்துார் வயல் அருகே தோட்டத்தில் நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென வனத்தீ ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வன ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயன்றனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.கூடலுார் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்கு சென்று தண்ணீரை பாய்ச்சி, இரண்டு மணி நேரம் போராடி வனத்தீயை கட்டுப்படுத்தினர். ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட புல்வெளிகள் எரிந்து சாம்பலானது. இப்பகுதியில், ஏற்பட்ட வனத்தீ முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் பரவுவதை தடுக்கும் வகையில், கார்குடி வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025