உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராத பழங்குடி இளைஞர்; மாவட்ட நிர்வாகம் உதவினால் முன்னேற்றம் நிச்சயம்

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராத பழங்குடி இளைஞர்; மாவட்ட நிர்வாகம் உதவினால் முன்னேற்றம் நிச்சயம்

பந்தலுார் : பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் விபத்தால் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போன நிலையில், சுய வேலை செய்து குடும்பத்தை பழங்குடி இளைஞர் காப்பாற்றி வருகிறார்.பந்தலுார் அருகே, எருமாடு பள்ளியரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்,39. இவர் கட்டுமான வேலை மற்றும் ஆசாரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாட்டு கொட்டகை வேலை செய்து கொண்டிருந்த போது, கீழே விழுந்தபோது, அவர் உடல் மீது சுவர் இடித்து விழுந்தது .அதில், இரண்டு கால்களும் முறிந்த நிலையில், ஆப்ரேஷன் செய்து தற்போது, வாக்கர் உதவியுடன் நடந்து வருகிறார். நடக்க முடியாவிட்டாலும் தான் கற்று கொண்ட, மர ஆசாரி தொழில் உதவியுடன், கொட்டாங்குச்சிகளை கொண்டு, அகப்பை, டம்ளர்கள், கலை நியமிக்க பொருட்கள் உருவாக்கி வருகிறார்.இதற்காக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில், நண்பர்கள் உதவியுடன் கொட்டாங்குச்சிகள் மற்றும் அதற்கு தேவையான தளவாட பொருட்களை பெற்று கொள்கிறார்.வாக்கர் உதவியுடன் ஆட்டோவில் ஏறி அருகில் உள்ள பஜார் பகுதிகளுக்கு, அவர் செய்த பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்கிறார்.ராஜன் கூறுகையில், ''நல்ல நிலையில் வேலை செய்து கொண்டிருந்த நான் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட போது, எனது குடும்பம் நிற்கதியாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.ஆனால், நம்பிக்கை இருந்ததால், என்னால் சுய வேலை வாய்ப்பு மூலம், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தேன்.எனினும், சில நாட்கள் ஒரு பொருள் கூட விற்பனை ஆகாத நிலையில், சிரமப்படும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவி கரம் நீட்டினால் பயனாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி