உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் காயம்

கூடலூர்;கூடலூர், கீழ்நாடுகாணி அருகே, தமிழக --கேரளா எல்லையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயமடைந்தார்.கர்நாடகா மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து, அரிசி ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு, கூடலூரைக் கடந்து கேரளா நோக்கி, சென்றது. இரவு 11:00 மணிக்கு, தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே, லாரி கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில், கேரளா சுங்கத்துறையை சேர்ந்த டிரைவர் அணில், 40, காயங்களுடன் தப்பினார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேரளா மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை