உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விபத்தில்லாத தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு

விபத்தில்லாத தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு

குன்னுார்: குன்னுார் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட. புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரெவரெண்ட் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். குன்னுார் தீயணைப்பு வீரர்கள் பேசுகையில், 'விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட மாணவர்களிடையே விழிப்புணர்வு அவசியம். பட்டாசுக்களை துாரத்தில் வைத்து வெடிக்க வேண்டும். ஆடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது: பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வேண்டும்,' என்றனர். நிகழ்ச்சியில், தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதிப்பு மீட்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்கத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதே போல, சி.எஸ்.ஐ., பள்ளி, காந்திபுரம் உட்பட பல பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை