மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
23 minutes ago
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
24 minutes ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
25 minutes ago
பந்தலுார்: எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதில், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, தற்போது பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், தமிழக எல்லை பகுதியாக உள்ள பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்கள் வழங்குவதுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.தாசில்தார் சிராஜூநிஷா தலைமையில் அலுவலகத் தில் கூடுதலாக தற்காலிக, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு விண்ணப்பங்கள் அனைத்தும், உடனுக்குடன் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூறுகையில், 'தற்காலிக பணியாளர்கள் மூலம் பதிவேற்றம் செய்யும் விபரங்கள், எந்த தவறுகளும் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். அவசர கதியில் பதிவேற்றம் செய்தால், புகைப்படம் மற்றும் முகவரி, பெயர்கள் தவறுதலாக மாறி, நாங்கள் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படும்,' என்றனர்.
23 minutes ago
24 minutes ago
25 minutes ago