மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார் : கூடலுார், பந்தலுாரில் விளைந்த குறுமிளகு பழுத்து உதிர்ந்து, பறவைகள் உட்கொண்டு செல்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளகு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யப்படும் குறுமிளகு, நடப்பு ஆண்டு விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.அதில், கடந்த டிச., மாதம் மழையை தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், குறுமிளகு முழுமையாக பழுத்து உதிர்ந்து வருகிறது. அதனை, பறவைகள் உட்கொண்டு செல்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலை, காபி தோட்டங்களில், ஊடுபயிராக உள்ள குறுமிளகு, 'கருப்பு தங்கம்' என, அழைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்ததால், பலரும் இதனை விளைவித்தனர்.விவசாயிகளின் கடன் சுமையை தீர்ப்பதில், பண பயிராக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய காலநிலை மாற்றத்தால், மிளகு பழுத்து உதிர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
03-Oct-2025